Saturday, June 21, 2014
இலங்கை::எமது நாட்டின் பிரச்சினையை எமது நாட்டுக்குள்ளே
தீர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளின் தலையீட்டினால் நன்மைபயக்காது. எனவே
வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்க்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.
பீரிஸ் தெரிவித்தார்.
ஐநா மனித உரிமை ஆணையாளர்
காரியாலயத்தினால் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள விசாரணைக்கு எதிர்ப்பு
தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் (ஜூன்
18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-
இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படை நோக்கம் என்ன? இது நியாயமான விசாரணை
அல்ல. இதனால் நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் புலிகளின் தீவிரவாதம் தலைவிரித்தாடியபோது இவ்வாறான ஒரு தீர்மானம்
எடுக்கப்படவில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னர் மூன்று தீர்மானங்கள் கொண்டு
வரப்பட்டன. அரசு தீவிரவாதத்திற்கு மறைந்து செயற்படுகிறது என்று பிள்ளை
தெரிவிக்கிறார். நியாயமான விசாரணையை நடத்துவார் என்று நாம் எதிர்பார்க்க
முடியாது.
ஐநா பொதுச் செயலாளருடன் இணைந்து கையெழுத்திட்ட
அறிக்கை மாற்றப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு சர்வதேச சட்டத்திற்கேற்ப
செயற்படுவதற்கு சம்மதித்திருந்தாலும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை
சம்மதிக்கவில்லை. இவையனைத்தும் சட்டரீதியாக நடைபெறவில்லை.
கண்ணிவெடிகளை அகற்றல்- மீள்குடியேற்றம் என்பவை குறித்து ஆராய்ந்து பாராமல்
செயற்பட்டுள்ளனர். விசேட தன்மையான விசாரணைகளை நடத்துவதை நாம் எதிர்க்கிறோம்.
உள்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டுள்ளனர். வடமாகாண
அலுவல்களில் தேவையில்லாமல் தலையிடுகின்றனர்.டயஸ்போராவின் தலையீடு அதிகம்.
அமைச்சர் ஒருவர் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பின்னர் வாபஸ்
வாங்கிக்கொண்டார். இலங்கை தொடர்பான சரியான நிலைமைய அறிந்துகொள்ளவேண்டும்.
இந்நாட்டில் நட்பூரீதிய கலந்துரையாடல் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெறல்
வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
இப்பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய 39 நாடுகளில் பெரும்பாலானவை வட அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகளாகும். சர்வதேச கருத்து தெளிவாக இல்லை. வெளிநாட்டு
கலாசாரத்தை திணிக்கும் செயலாகவே இது அமைந்துள்ளது என அவர் மேலும்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment