Sunday, June 22, 2014
மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு எவரையும் இலங்கையினுள்
அனுமதிக்க மாட்டோம் என என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா
தெரிவித்தார். மடவளையில் இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கத்தின்
தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத்
தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,இந்தநாட்டில் சகல இனங்களுக்கும்
தத்தமது சமயக்கடமைகளை நிறைவேற்றும் உரிமை உண்டு. சிங்களம், தமிழ் முஸ்லிம்
என்ற பாகுபாடு இன்றி சகல இனங்களும் சகல சமயங்களும் எல்லாவற்றையும் சமமாக
அனுபவிக்கும் உரிமையுண்டு.
கடந்த கால யுத்த்தின் போது வடபகுதியில் உள்ள முஸ்லிம்களும் அப்பாவித்
தமிழர்களும் அனேக துன்பங்களை அனுபவித்து வந்தனர். வணக்கஸ்தலங்கள்
தாக்கப்பட்டன. ஸ்ரீ தலதா மாளிகை கூட தாக்கப்பட்டது. முன்னை ஜனாதிபதிகள்
எவராலும் செய்ய முடியாது போன ஒன்றை எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதனைச்
செய்து காட்டினார்.
சதாம் ஹுசைன் நாட்டுக்கு நல்லதைச் செய்தவர். ஆனால் இன்று அமெரிக்காவின்
தலையீடு காரணமாக ஈராக்கில் தினம் ஆயிரக்கணக்கானோர் மரணமடைகின்றனர்.
லிபியாவிலும் இதே நடந்தது. எகிப்திலும் இதுதான் நடக்கிறது. இலங்கையிலும்
இதனையே மேற்கொள்ள முயற்சிக்கும் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கும் எவரையும்
நாட்டினுள் அனுமதிப்பதில்லை என பாராளுமன்றில் நாம் முடிவெடுத்துள்ளோம். மிக
வேகமாக வளர்ந்து வரும் இலங்கையின் மீது கொண்ட பொறாமை காரணமாகவே எம்மை
வீழ்த்த முயற்சிக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment