Tuesday, June 24, 2014

பிரிவினைவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, June 24, 2014
இலங்கை::பிரிவினைவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
 
இன அல்லது மத ரீதியான முரண்பாடுகளை துண்டும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான பூரண அதிகாரங்களை சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவோருக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.நாட்டின் பொதுவான சட்டங்களை மீறிச் செயற்படுவோரை கடுமையாக தண்டிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இன அல்லது மத வன்முறைகளைத் தூண்டும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில தரப்பினர் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும், மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment