Tuesday, June 24, 2014
இலங்கை::மீண்டும் நாட்டில் ஆயுத போராட்டம் எற்படக் கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை::மீண்டும் நாட்டில் ஆயுத போராட்டம் எற்படக் கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் பேருவளை, அலுத்கம போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் சிறு அளவிலான சம்பவங்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல நூற்றாண்டு காலமாக இலங்கையில் அனைத்து இன சமூகங்களும் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தாகத் தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் நோக்கங்களை உடைய தரப்பினர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் சீரிய ஒழுக்கத்துடன் கடமைகளில் ஈடுபட்டு வருவதாகவும், வன்முறைகளில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகள் மட்டுமன்றி நாட்டில் வேறும் எந்தவொரு கடும்போக்குவாத செயற்பாடுகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment