Wednesday, June 25, 2014

இனவாதம், மதவாதம் கண்டிக்கப்பட வேண்டியது: அகில இலங்கை இந்து காங்கிரஸ்!

Wednesday, June 25, 2014
இலங்கை::இனவாதம், மதவாதம் கண்டிக்கப்பட வேண்டியது என அகில இலங்கை இந்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சிறுபான்மை இன மற்றும் மத சமூகங்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என சுட்டிக்காட்டியுள்ளது. எந்தவொரு தரப்பினரும் இன ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், அதற்கு அனுதமிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மத மற்றும் கலாச்சார தனியடையாளங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவற்றை பயன்படுத்தி ஏனைய மத சமூகங்கள் ஒடுக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து இன மக்களும் தாங்கள் முதலாம் தர பிரஜைகள் என்பதனை உணரக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும், எவரும் இரண்டாம் தரப் பிரஜைகளாக தங்களை எண்ணக்கூடிய பின்னணி உருவாக்கப்படக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைத்து இன மத சமூகங்களுக்கும் சுதந்திரமாக வாழக் கூடிய சந்தர்ப்பம் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. குறிப்பாக விரும்பிய மதத்தை வழிபாடு செய்யும் உரிமையை சுட்டிக்காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளது. நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை இந்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இன அல்லது மதவாத அடிப்படையிலான சகல பிரச்சாரங்களும் தடை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அனைத்து மத சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment