Wednesday, June 25, 2014

அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாத் காரியவாசம் பராக் ஒபாமாவை எதிர்வரும் 14 ஆம் திகதி சந்தித்துப் பேசவுள்ளார்!

Wednesday, June 25, 2014
இலங்கை::அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாத் காரியவாசம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை எதிர்வரும் 14 ஆம் திகதி சந்தித்துப் பேசவுள்ளதாக வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவாசம் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடந்த வாரத்தில் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய ஜெயசூரியவின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை ஜூலை 14 ஆம் திகதி பிரசாத் காரியவாசம் சந்திக்கின்றார்.

இலங்கை வெளிவிவகாரச் சேவையில் 1981 இல் இணைந்துகொண்ட பிரசாத் காரியவாசம் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும், ஜெனிவா மற்றும் நியூயோர்க்கில் ஐ.நா.வுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றய அனுபவத்தைக் கொண்டுள்ளவர்.

No comments:

Post a Comment