Tuesday, June 24, 2014

ஒரு சில அடிப்படைவாதிகளின் செயல்களினால் உருவாகி யிருக்கின்ற இனப்பதற்றத்தை மேலும் உசுப்பிவிட்டு அரசி யல் இலாபம் பெறும் முயற்சியில் unp-tna உட்பட சில கட்சிகள்!

Tuesday, June 24, 2014
இலங்கை::ஒரு சில அடிப்படைவாதிகளின் செயல்களினால் உருவாகி யிருக்கின்ற இனப்பதற்றத்தை மேலும் உசுப்பிவிட்டு அரசி யல் இலாபம் பெறும் முயற்சியில் ஐ.தே.க. உட்பட சில கட்சிகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன.

பல்சமூக கட்டமைப்புள்ள ஒரு நாட்டில் சில அசாதாரண நிலைகள் ஏற்படுகின்ற போது இனங்களை ஒற்றுமைப்படுத்தி ஐக்கியம் பேணுவதுதான் பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் தலையாய பணியாகும். இதனைவிடுத்து அடிப்படைவாதிகளின் செயல்க ளுக்கு எண்ணெய் ஊற்றுவதும் தூண்டிவிடுவதும் நாட்டுக்கும் மக்களுக்கும் கேடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
இனங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்படும் போது அதனுடைய அடிப்படைகள் கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளியெறியும் செயற்பாடுகளில் அரசாங்கம் துரிதமாக ஈடுபட்டு வரும் வேளையில் இந்தக் கட்சிகள் நடந்து கொள்ளும் விதம் நாட்டை சீரழிவுக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும்.
 
தென்மாகாணத்தில் அளுத்கம, தர்காநகர், பேருவளை உட்பட பலபிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்ட அசாதாரண நிலை நாம் எதிர்பாராமல் நடந்ததாக இருந்தாலும் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை எவரும் நிராகரிக்க முடியாது.
காலம் காலமாக ஐக்கியமாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் கசப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பது பெரும் கவலைக்குரிய விடயம். இந்த நிலையை தொடர விடக் கூடாது.
 
சம்பவங்களின் சூத்திரதாரிகளான அடிப்படைவாதிகளின் தான் தோன்றித்தனமான செயலைக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சட்டத்தை கையிலெடுக்க எவருக்கும் நான் அனுமதிக்க மாட்டேனெனக் கூறியிருப்பது அவருடைய உறுதி யான தலைமைத்துவத்தைக் காட்டுகிறது.
 
பதுளையில் நடந்த (21.06.2014) அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் சட்டம், ஒழுங்கை உரிய முறையில் செயற்படுத்துமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவு பொருத்தமான நேரத்தில் விடுக்கப்பட் டிருக்கிறது. இது முற்றிலும் வரவேற்கக் கூடிய விடயமாகும்.
 
இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கின்ற கசப்பான நிலை தொடர்வதற்கு ஜனாதிபதி எந்தவகையிலும் அனுமதிக்கவில்லை. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொலிஸ், இராணுவத்தினரை வரவழைத்த அவர், பாதிப்புப் பகுதிகளுக்கு அனுப்பி நிலை மையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பது உறுதியான நடவடிக்கைக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருக்கிறது.
1977, 1978, 1983 ஆம் ஆண்டுகளில் (ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில்) இனக்கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஜே.ஆர்.ஜயவர்த் தன தலைமையிலான அப்போதைய அரசாங்கம் அவைகளைக் கட்டுப்படுத்த திராணியற்றதாகவே இருந்தது.
 
1983 ஆம் ஆண்டு ஜுலைக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெரும் கரும்புள்ளி என்பதை எவரும் மறந்து விட முடியாது. ஐ.தே.க அரசினால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த இனவன்மத்தை முழு உலகமும் கறுப்பு ஜுலை என்றே இன்றும் வர்ணிக்கின்றன.
 
83 இனக்கலவரம் ஐ.தே.க. குண்டர்களால் முடுக்கிவிடப்பட்ட போது அப்போதைய ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க அரசு அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய உடனடி நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. மாறாக சமாளிப்புகளிலும் மழுப்பல் பதில்களிலுமே காலத்தைக் கடத்தியது.
ஆனால் இனமுறுகல் ஒன்று ஏற்பட்ட நிலையில் இன்றைய ஐ.ம.சு.மு அரசு வன்முறைகளை கட்டுப்படுத்தும் துணிச்சலான நடவடிக் கைகள் எடுத்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது.
 
சம்பந்தப்பட்டவர்கள் மீது தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தர விட்டார். அதேநேரம் ஐ.ம.சு.மு தலைவர்கள் அளுத்கம, தர்கா நகர், பேருவளை சம்பவங்களை வன்மையாகக் கண்டித்தார்கள்.
 
ஒட்டுமொத்தத்தில் இனவாதிகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் தீனிபோடுவதை இன்றைய ஆட்சியாளர்கள் செய்யவில்லை. மாறாக கட்டுப்படுத்தும் துணிகரமான நடவடிக்கையை முன்னெ டுக்கிறார்கள் என்பதே உண்மை.
 
பொலிஸாருக்கு ஐந்துநாள் லீவு கொடுத்து அனுப்பிவிட்டே ஐ.தே.க. அரசு 83 இனக்கலவரத்தை நடத்தி முடித்ததாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதுபோன்றதொரு தேவை இன்றைய அரசாங்கத் துக்கு இல்லவே இல்லை.
இன, மத குரோதங்களை ஏற்படுத்தும் அடிப்படைவாதிகளின் முயற் சிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்பது திண்ணம்

No comments:

Post a Comment