Friday, June 20, 2014
இலங்கை::பாராளுமன்றத்; தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்க நேற்றைய தினம் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழக்கூடிய பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்த தெரிவுக்குழு நிறுவப்பட்டது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி வரையில் தெரிவுக்குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 96ம் நிலையியற் கட்டளையின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்க அனுமதி கோரி, அவைத்து தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தீர்மானமொன்றை பாராளுமன்றில் சமர்த்திருந்தார்.
குறித்த காலத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் யோசனைகளை சமர்ப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை,
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள்
தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர்
நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக நாட்டின் தேசிய
இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் நடைமுறைச்
சாத்தியம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment