Friday, June 20, 2014
இலங்கை::நாட்டில் குழப்பங்களை விளைவிக்க சில கடும்போக்குவாத சக்திகள் முயற்சித்து வருவதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கை::நாட்டில் குழப்பங்களை விளைவிக்க சில கடும்போக்குவாத சக்திகள் முயற்சித்து வருவதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம, பேருவளை சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு நாட்டில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இடமளிக்கக் கூடாது. பள்ளிவாசலுக்கு செல்லும் முஸ்லிம் மக்களை குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் மக்கள் அமைதியான முறையில் மதவழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.
சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
கடும்போக்குவாதிகள் மக்களை பிழையாக வழிநடத்தி வன்முறைகளைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான முயற்சிகளுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என சகல இன சமூகங்களிடமும் கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைக் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment