Friday, June 20, 2014
இலங்கை::தலைநகர் கொழும்பிற்கு இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை::தலைநகர் கொழும்பிற்கு இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சினால் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய
நாட்களில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்;கள் காரணமாக இவ்வாறு
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் சகல காவல் நிலையங்களுக்கும் இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை பரப்பக் கூடாது எனவும் மக்கள் வதந்திகளை நம்பக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப காவல்துறையின் உளவுத் தகவல் திரட்டும்
கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பேருவளை, அலுத்கம பிரதேசத்தில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள போதிலும்,
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 50 பேர் வரையில் வீடியோ
காட்சிகளின் உதவியுடன் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment