Friday, June 20, 2014

விஜித தேரரின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கிடையாது: பொதுபல சேனா!

Friday, June 20, 2014
இலங்கை::தேசிய பல சேனா இயக்கத்தின் அழைப்பாளர் வட்டரக்கே விஜித தேரரின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கிடையாது என பொதுபல சேனா இயக்கம் அறிவித்துள்ளது.
 
பாணந்துறை பகுதியில் வைத்து நேற்றைய தினம் வட்டரக்க விஜித தேரர், இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார். சம்பவத்தில் காயமடைந்த விஜித தேரர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தம்மையும் பொதுபல சேனா இயக்கத்தையும் தாக்குதல் சம்பவத்துடன தொடர்புபடுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்று கட்டவிழ்த்தவிடப்பட்டுள்ளதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். விஜித தேரர் பற்றி பேசுவதற்கே விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுளளார். தமக்கோ தமது அமைப்பிற்கோ இந்த தாக்குதல் சம்வத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment