Wednesday, June 25, 2014

கடலோர பாதுகாப்பு: இன்று ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை!

Wednesday, June 25, 2014
சென்னை::தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை (ஜூன் 25) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவதைத் தடுப்பதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை போலீஸôர் ஆம்லா ஆப்ரேஷன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
 
இந்த ஒத்திகையில் தீவிரவாதிகள் போன்று மாறு வேடத்தில், கடல் வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ ஊடுருவி வரும் போலீஸôரை கடற்கரையோரம் பாதுகாப்பில் இருக்கும் போலீஸôர் பிடிப்பார்கள். இதுவே ஆம்லா ஆப்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த ஆம்லா ஆபரேசன் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை காலை தொடங்கி இரண்டு நாள்கள் 48 மணிநேரம் நடைபெறுகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர காவல் படை,  கடலோர பாதுகாப்பு படை, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட காவல்துறையின் அனைத்து பிரிவுகளும், வருவாய்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இந்த பாதுகாப்பு ஒத்திகைக்காக தயாராக உள்ளனர்.
 
இந்த ஒத்திகை புதன்கிழமை காலை தொடங்குகிறது. ஒத்திகையின்போது திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை செய்வார்கள்.
 
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதலே கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment