Wednesday, June 25, 2014

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் புலிகளின் ஆதரவாளர்!

Wednesday, June 25, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் விசாரணைக்  புலிகளின் ஆதரவாளர் என சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவில் ஆலோசகர்களில் ஒருவராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மராட்டி அத்திசாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் புலிகளின் ஆதரவாளர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொசோவோவை தனி நாடாக பிரகடனம் செய்வதற்கான எற்பாடுகளை அத்திசாரியே மேற்கொண்டிருந்தார்.
வன்னிப் போர் இடம்பெற்ற காலத்தில் அத்திசாரி இலங்கைக்கு விஜயம் செய்து போரை நிறுத்த முயற்சித்தார்.
இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவின் ஆலோசகர்களாக நியூசிலாந்தின் சில்வியா கட்ரைட் மற்றும் பின்லாந்தின் அத்திசாரி ஆகியோர் கடமையாற்ற உள்ளதாக சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment