Monday, June 2, 2014

தமிழக காங்கிரசுக்கு சுதர்சன நாச்சியப்பன் தலைவர் ?

Monday, June 02, 2014
சென்னை::பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் படுதோல்வியை தழுவியது.
கன்னியாகுமரி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் பறிபோனது.
 
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து பி.எஸ்.ஞானதேசிகன் விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், .வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு ப.சிதம்பரம் தான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டனர்.
 
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்ற மேலிடம் முடிவு செய்து உள்ளது. தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
 
ப.சிதம்பரம் அல்லது ஜி.கே.வாசன் கோஷ்டியில் இல்லாத ஒருவரை தலைவர் பதவியில் அமர்த்த முடிவு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாராளுமன்ற நிலைக்குழு முன்னாள் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment