Monday, June 2, 2014

மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த தீவிரவாதி முகமது உசைனி இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறான்!

Monday, June 02, 2014
புது டெல்லி::மலேசியாவில் கோலாலம்பூர் அருகே உள்ள கி பாங் என்ற இடத்தில் இலங்கையை சேர்ந்த தீவிரவாதி முகமது உசைனி என்பவன் மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
 
இவன் ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின் பேரில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதி ஆவான்.
 
இவனிடம் விசாரணை நடத்த தூதரகம் மூலம் மலேசிய அரசுடன் தமிழக போலீசார் மலேசியாவுடன் தொடர்பு கொண்டனர். அதன் பேரில் தீவிரவாதி உசைனியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க மலேசியா சம்மதித்துள்ளது. இவனிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் சென்னையில் ஐ.எஸ்.ஐக்கு உதவி செய்பவர்கள் பற்றிய விவரம் தெரியவரும்.

No comments:

Post a Comment