Monday, June 2, 2014

புலிகளினால் கொலை செய்யப்பட்ட ஜனநாயகத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் புலிபயங்கரவாதியை நினைவு கூர முடியாது: புலிகூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் குழுவொன்று முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடத்த யாழ்.மேயர் கடும் எதிர்ப்பு!

Monday, June 02, 2014
இலங்கை::புலிகளினால் கொலை செய்யப்பட்ட ஜனநாயகத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் புலிபயங்கரவாதியை நினைவு கூர முடியாது: புலிகூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் குழுவொன்று முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடத்த யாழ்.மேயர் கடும் எதிர்ப்பு!
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி  புலிகளின் தலைவர்  பிரபாகரனின் நினைவாக “முள்ளிவாய்க்கால் நினைவு” நிகழ்வை நடத்த மேற்கொண்ட முயற்சியை யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் குறித்த அந்தக் குழு உறுப்பினர்களுக்கு அந் நிகழ்வை நடத்த முடியாமல் போயுள்ளது.
 
இவர்கள் இந்த நிகழ்வை நடத்தி மக்கள் மத்தியில் குழப்ப நிலையை உருவாக்க திட்டமிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணத்தில் ரி. என். ஏ.யின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் முள்ளிவாய்க்கால் நினைவை நகரசபையில் நடத்துவதற்கு அனுமதி கோரியதாகவும் அதனை எதிர்த்து தான் அக் கோரிக்கைகளை நிராகரித்ததாகவும் யாழ். மேயர் தொடர்ந்து தெரிவித்தார்.
 
அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று, அவர்களின் சுதந்திரத்தை இல்லாமற் செய்த பிரபாகரனை நினைவுகூர்ந்து வைபவம் நடத்துவதானால் அதற்கு முன்னர் புலிகளினால் கொல்லப்பட்ட மற்ற அரசியல்வாதிகள் உட்பட தமிழ்ப் பிரமுகர்களும் நினைவு கூரப்பட வேண்டும் அவர்கள் நினைவு கூரப்படாத நிலையில் பயங்கரவாத தலைவரை நினைவு கூரும் வைபவத்தை நடத்த அனுமதிக்க முடியாது.
 
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் எந்தச் சம்பவத்துக்கும் தான் இடமளிக்க மாட்டேன் என்றும் மேயர் தெரிவித் தார். துரையப்பா, அமிர்தலிங்கம் உட்பட தமிழ் மக்களுக்காக பெரும் சேவைகளை புரிந்த தலைவர்கள் பலர் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். 1983ம் ஆண்டிலிருந்து படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவதாயின் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுமதிக்க முடியும் என யாழ். மேயர் கூறினார்.
 
இதனை மறுத்துரைத்த புலிகூட்டமைப்பின் உறுப்பினர்கள் “அவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டால் கொல்லப்பட்ட துரோகிகளுக்கும் நாம் அஞ்சலி செலுத்தியதாக அர்த்தப்படும். அவ்வாறான ஒரு கொள்கைக்காக தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை என தெரிவித்து தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

No comments:

Post a Comment