Monday, June 2, 2014

ஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் உல்லாசப் பயண விசாவில் இலங்கைக்கு வருவதானால் அவருக்கு அனுமதி வழங்கப்படும்: கெஹலிய ரம்புக்வெல!

Kofi Annan gibt als Sondervermittler für Syrien auf
Monday, June 02, 2014
இலங்கை::ஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் உல்லாசப் பயண விசாவில் இலங்கைக்கு வருவதானால் அவருக்கு அனுமதி வழங்கப்படும், ஆனால், போர் குற்றங்கள் பற்றிய விசாரணைக்காக அவர் வருவதானால் விசா வழங்குவது குறித்து வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மேற்கொள்ளவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவப்போவதில்லை எனவும் தெரிவித்த அவர், இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பி;ட்டார்.

குறிப்பிட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கும் நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்காக உதவுவது என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் குறிப்பிட்;ட அவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நியமிக்கப்படும் விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கு விசா வழங்குவது குறித்து வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.

ஐ.நா. விசாரணைக்குழுவின் தலைவராக முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் நியமிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல, உல்லாசப் பயண விசாவில் கொபி அனான் வந்தால் அவருக்கு விசா வழங்கப்படும் எனத் தெரிவித்தார். விசாரணைக்குழு சார்பாக அவர் வருதாயின் வெளிவிவகார அமைச்சே அதனையிட்டுத் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment