Monday, June 2, 2014

இலங்கை கடற்படையினர் கைது செய்த 33 தமிழக மீனவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Monday, June 02, 2014
ராமேஸ்வரம்::இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்கள் 33 பேரை, இன்று காலை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.தமிழகத்தில் 45 நாள் மீன்பிடி தடை காலத்துக்கு பிறகு மே 31ம் தேதி காலை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறை அனுமதி அளித்தது. ஆனால் 30ம் தேதி இரவே ராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழக அரசின் மீன்வள துறை அனுமதி இல்லாமல் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், அடுத்த நாள் மாலை இலங்கை தலைமன்னார் கடல் பகுதிக்குள் நுழைந்த குழந்தைச்சாமி, செந்தூரான், கண்ணன், முனியராஜ், பால்பாண்டி, முருகன் மற்றும் இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்றிருந்த மகேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான 7 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
 
படகில் இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பாண்டி, முத்து, முனியசாமி, ரவிச்சந்திரன், லெட்சுமணன், செல்வம், ஆறுமுகம், அருள்தாஸ், கோரிபோஸ் உள்பட 33 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அன்று இரவு முழுவதும் கடற்படை உயர் அதிகாரிகள், மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று மாலை மன்னார் மாவட்ட இலங்கை கடல்தொழில் அதிகாரி வி.எஸ்.மெரண்டாவிடம் 33 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இன்று காலை மன்னார் கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்தினர்.

No comments:

Post a Comment