Monday, June 02, 2014
நியூயார்க்::பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் போட்டோக்களை ரகசியமாக அமெரிக்க உளவு துறை திரட்டி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ கடந்த ஆண்டு இணையதளங்களில் ஊடுருவி உலகம் முழுவதும் உள்ள மக்களின் கம்ப்யூட்டர்களில் இருக்கும் தகவல்களை திரட்டியதாக அதன் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். அதனால் அவரை கைது செய்ய அமெரிக்க அரசு முயற்சித்தது.
அவர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார்.இதற்கிடையில் முகங்களை ஒப்பிட்டு பார்த்து அடையாளம் காணும் புதிய வகை மென்பொருள் கடந்த 4 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் உளவு துறை, பல்வேறு இணையதளங்களுக்குள் ஊடுருவி பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் லட்சக் கணக்கான மக்களின் புகைப்படங்களை ரகசியமாக திரட்டி வருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், என்எஸ்ஏ புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளிட்டவற்றை சேகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 55 ஆயிரம் முக அடையாளம் உள்ளிட்ட லட்சக்கணக்கான போட்டோக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் தேடப்படும் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் தெரிய வரலாம் என்று அமெரிக்க உளவு துறை கருதுகிறதுÕ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்எஸ்ஏ அதிகாரி வானி எம் வின்ஸ் கூறுகையில், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றில் உள்ள புகைப்படங்களை திரட்ட எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லைஎன்று தெரிவித்தார். தற்போது என்எஸ்ஏவின் இந்த விவகாரம் மீண்டும் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment