Monday, June 23, 2014

இனவாத வன்முறைகளை தடுக்க ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் பாடம் கற்றுக்கொள்ள திட்டம்: அஜித் ரோஹண!

Monday, June 23, 2014      
இலங்கை::இனவாத வன்முறைகளை தடுக்க ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் பாடம் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
மக்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதனை காவல்துறையினர் தடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இன மற்றும் மத வன்முறைகளை தடுப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் கொள்கைகளை பின்பற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டை அசௌகரியத்திற்கு இட்டுச் செல்லும் குறுகிய நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment