Monday, June 23, 2014

முஸ்லிம்களுக்கு 300 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை வழங்கிய ஜனாதிபதி!

Monday, June 23, 2014      
இலங்கை::எதிர்வரும் புனித நோன்புக்காக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 300 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை கையளிக்கும் நிகழ்வு பிரதம மந்;திரி டி.எம்.ஜயரத்ன தலைமையில் மாளிகாவத்தை சதோச களஞ்சியசாலையில்   ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றது.
 
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் பிரதம மந்திதிரி டி.எம்.ஜயரத்தன இவற்றை கையளித்தார். இப்பேரீச்சம் பழங்கள் நாடாளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இந்நகிழ்வில் சதோச நிறுவனத்தின் தலைவர் நலின்பெனாண்டோ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல், ஐ.ரி.என் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment