Monday, June 23, 2014

மத மற்றும் இனத்துவ அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளை தடை செய்ய வேண்டும்: ரொஹான் குணரட்ன!

 Monday, June 23, 2014      
இலங்கை::மத மற்றும் இனத்துவ அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளை தடை செய்ய வேண்டுமென பயங்கரவாத ஒழி;ப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இன மற்றும் மதவாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவினை ஏற்றுக்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப, ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுபல சேனா போன்ற இன மற்றும் மதவாத அடிப்படையிலான கட்சிகள் தடை செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அரசியல் கட்சிகள் நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில்  புலிகளின் ஆயுத போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாடு எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய சவாலாக தெற்கு பிரிவினைவாதம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருவளை அலுத்கம பிரதேசத்தில் படையினர் உரிய நேரத்தில் தலையீடு செய்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக் கொண்டு வந்த காரணத்தினால், கறுப்பு ஜூலை போன்றதொரு சம்பவம் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட நபரும் மற்றமொரு நபரையோ அல்லது இன,மத சமூகத்தையோ இழிவுபடுத்த அனுமதிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குரோத உணர்வுகளைத் தூண்டக் கூடிய பேச்சுக்கள் பிரச்சாரங்களை தடுக்க தற்போது நாட்டில் சட்டங்கள் எதுவும் கிடையாது எனவும், இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய சட்டமொன்றை உருவாக்க வேண்டுமெனவும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

நாட்டில் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் கிடையாது எனவும், சகோதரத்துவம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் குறுகிய நோக்கங்களுக்காக இன உணர்வுகளை மத உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் லாபமீட்டிக் கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இன மத விவகாரங்கள் அரசியலுக்கு கொண்டு வரப்படுவதனை தடுக்கும் வகையில் சட்டங்கள் அவசியப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகார மோகம் கொண்ட அரசியல் தலைவர்கள் சமூகத்தை இன மத சமூக அடிப்படையில் பிளவுபடுத்தி அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment