Saturday, June 21, 2014

கல்முனை, சம்மாந்துறையில் பொது பல சேனாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

Saturday, June 21, 2014
இலங்கை::அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நேற்று இடம்பெற்றது.

பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்; முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும், பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் போன்ற சுலோகங்களை மக்கள் ஏந்தியிருந்தனர்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் உட்பட பெருந்திரளான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை சம்மாந்துறை சலாமிய இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் சம்மாந்துறையில் பாரிய கண்டன ஊர்வலம் ஒன்று நேற்று இடம்பெற்றது

அமைதியான முறையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய், பொதுபல சேனாவை தடை செய், ஞான சாரவை கைது செய் போன்ற சுலோகங் களை பொது மக்கள் ஏந்தியிருந்தனர். 

No comments:

Post a Comment