Friday, June 20, 2014
மீனம்பாக்கம்::இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான அரை கிலோ தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த முகமது நலிம் (44) என்பவர் சுற்றுலா பயணியாக சென்னைக்கு வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரை நிறுத்தி தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது ஆசனவாயில் கருப்பு நிறத்தில் ஒரு பொட்டலம் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது பலூன் இருந்தது. அதற்குள் சிறு சிறு தங்கக்கட்டிகள் கருப்பு பேப்பரால் சுற்றப்பட்டிருந்தது. மொத்தம் அரை கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம். இதையடுத்து முகமது நலிமை கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment