Wednesday, June 25, 2014

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 1377 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

Wednesday, June 25, 2014
இலங்கை::சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 1377 வெளிநாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நைஜீரியா, இந்தியா,  ரஸ்யா,  நேபாளம்,  கொரியா,  இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதிகள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்தியர்களே அதிகளவில் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் 700ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஜோதிடர்கள், நோய்களைக் குணப்படுத்துவோர் என பல்வேறு வழிகளில் இந்தியர்கள் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணம் சம்பாதித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment