Wednesday, June 25, 2014

தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஜெயலலிதா ராஜபக்சவை சந்தித்து பேச வேண்டும்: சுப்பிரமணியசாமி!

Wednesday, June 25, 2014
சென்னை:தமிழக மீனவர் பிரச்சினைக்கு, இலங்கை அதிபர் ராஜபக்வை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
 
தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்வளங்களை சுரண்டுவதாக, இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
 
இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து பேச வேண்டும்.
 
மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்சவையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment