Wednesday, June 25, 2014
இலங்கை::ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச, ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகத்தின் அழைப்பின் பேரில் நான்கு நாள் பயணமாக கடந்த வாரம் ஜப்பான் சென்றிருந்தார்.
இதன்போது, பல்வேறு ஜப்பானிய அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ஜப்பானின் முன்னாள் விசேட தூதுவர் யசூசி அகாசியையும் சந்தித்துப் பேசினார்.
ஜப்பானில் உள்ள மொனோரயில் திட்டத்தினை கோத்தபாய பார்வையிட்டு, ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற மொனோரயில் திட்டத்தினை அறிமுகப்படுத்த ஜப்பான் தயாராகவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீளிணக்கம், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, அமைதியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அகாசி மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து அட்மிரல் வசந்த கரன்னகொடவும் இச்சந்திப்பின்போது கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment