Tuesday, May 27, 2014
இலங்கை::நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமையi முழுமையாக இல்லாதொழிப்பது ஆபத்தானது என ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சமூக நிதிக்கான பேரவையின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை சந்தித்த போது ஜாதிக ஹெல உறுமய கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைமைகளில் சில திருத்தங்களை செய்யாது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது ஆபத்தானது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 17ம் திருத்தச் சட்ட அமுலாக்கம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதன் மூலம் சிறுபான்மை கட்சிகளின் பலம் அதிகரிக்கும் என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது. சிறுபான்மை இனவாத கட்சிகள் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து ஓர் ஏதுவாக அமையக் கூடுமென தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை, தேர்தல் தொகுதி திருத்தங்களின் பின்னரே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி சுடு;டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment