Tuesday, May 27, 2014

இராஜதந்திர கடவுச் சீட்டுக்கைள வழங்குவதில் முறைகேடுகள் எனதுவும் இடம்பெறவில்லை: இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம்!

Tuesday, May 27, 2014
இலங்கை::இராஜதந்திர கடவுச் சீட்டுக்கைள வழங்குவதில் முறைகேடுகள் எனதுவும் இடம்பெறவில்லை என இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2006ம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின் அடிப்படையில் சகல ராஜதந்திர கடவுச் சீட்டுக்களும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள், பொருத்தமற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், இவ்வாறான முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் உயரதியாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக சுற்று நிருபத்திற்கு புறம்பான வகையில் எவருக்கும் கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருத்தமற்றவர்களுக்கு இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி வருவோர் பிழையாக புரிந்து கொண்டே குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக மாணவர்களுக்கு இராஜத்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ஒருவரின் மகன் அல்லது மகள் மாணவராக இருந்தாலும் ராஜதந்திர கடவுச் சீட்டு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், வர்த்தகர்கள் எவ்வாறு இராஜதந்திர கடவுச் சீட்டுக்களை பெற்று;ககொண்டார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ராஜதந்திர கடவுச் சீட்டுக்கான பரிந்துரைகளை செய்யக் கூடிய ஒரே நிறுவனம் வெளிவிவகார அமைச்சு என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment