Tuesday, May 27, 2014

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலி உறுப்பினர்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரிடம்!

Tuesday, May 27, 2014
இலங்கை::புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் மலேசியாவில் கைதான மூவரையும் மலேசிய அரசு இன்று நாடு கடத்தியது. இவர்கள் மூவரும் இலங்கை வந்தடைந்த நிலையில் பயங்கரவாதத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 
 
இந்த மூவரும் மலேசியாவின் சொலாங்கூர் பிரதேசத்தில் தங்கியிருந்த வேளை அந்நாட்டு பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி அவர்களைக் கைது செய்தனர் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
 
அந்த மூன்று உறுப்பினர்களும் நேற்றிரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளைப் பயங்கரவாதப் புலயனாய்வு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment