Tuesday, May 27, 2014

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, இலங்கை - இந்திய மீனவர் சிக்கலுக்கு இணக்கமான உடன்பாடு!

Tuesday, May 27, 2014
சென்னை::இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, இலங்கை - இந்திய மீனவர் சிக்கலுக்கு இணக்கமான உடன்பாடு ஆகியவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய விடயங்களைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்." - இவ்வாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் புதிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

பிரதமரின் பதவியேற்பு விழாவுக்காக புதுடில்லிக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று முற்பகல் இந்தியப் பிரதமருடன் சுமார் 20 நிமிட நேரம் நேரடியாகப் பேசினார். அப்போதே இந்த விடயங்களை இந்தியப் பிரதமர் தெளிவாகத் தெரிவித்தார்

இந்தநிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஹைத்ராபாத் மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கை இந்திய உறவுகளை புதிய அணுகுமுறையுடன் முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

தனது பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தமை நரேந்திர மோடியின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய தருணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல் நாடுகளுடன் வலுமிக்க உறவுகளை மேம்படுத்துவதே தமது வெற்றியின் நோக்கம் என நரேந்திர மோடி தேர்தல் வெற்றியின் போது தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, மோடி இன்று மதியம்; சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பல தசாப்தங்களாக நிலவிய இந்து பாக்கிஸ்தான் தீவிர நிலைமையை கருத்தில் கொள்ளாது பிரதமர் நவாஸ் ஜெரீப்புக்கு திறந்த அழைப்பு விடுத்தமை முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment