Tuesday, May 27, 2014

(புலிகளின் துணைப்படை) வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பு!

Tuesday, May 27, 2014
இலங்கை::(புலிகளின் துணைப்படை) வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அடிப்படைவாத சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். வடக்கில் தொடர்ந்தும் இயங்கி வரும் கடும்போக்குடைய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவேவே இவ்வாறு விக்னேஸ்வரன் நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் அமைதியான சூழ்நிலையில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபையின் முதலமைச்சர், பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணியக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை ஐக்கியமான நாடு என்பதனை உலகிற்கு உணர்த்தும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விக்னேஸ்வரனை தம்முடன் இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல முயற்சித்ததாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உதய கம்மன்பில தெரிவதித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த முயற்சி முழுக்க முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அழைப்பினை நிராகரித்ததன் மூலம் விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தினை விரும்பவில்லை என்பது புலனாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வருவதில்லை என்பது விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் மூலம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் (
புலி)கூட்டமைப்பு தேசிய ஒற்றுமையை விரும்பவில்லை என்பது விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். ஏனைய எட்டு முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்காது ஜனாதிபதி வட மாகாண சபையின் முதலமைச்சரை தம்முடன் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நலன்களை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கருதுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment