Tuesday, May 27, 2014
புதுடெல்லி: நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவர் இன்று காலை சவுத்பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக பொறுப்பேற்று கொண்டார். இதன் பின்னர், ஐதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. நாடு முழுவதும் வீசிய நரேந்திரமோடி அலையில் பாஜ மட்டும் தனித்து 282 இடங்களில் வெற்றி வாகை சூடி 30 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக தனிப்பெரும்பான்மை கட்சியாக ஆட்சியமைத்துள்ளது. நரேந்திரமோடி தலைமையில் 46 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றுக் கொண்டது. நரேந்திரமோடி மற்றும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடி அமைச்சரவையில் 23 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 10 பேருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியும், 12 பேருக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு விவரங்கள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இன்று காலை சரியாக 9 மணிக்கு சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு நரேந்திர மோடி வந்தார். அங்கு மகாத்மா காந்தி படத்துக்கு மலர் தூவி வணங்கி விட்டு, பிரதமர் இருக்கையில் அமர்ந்து முறைப்படி பொறுப்பேற்றார். அவருக்கு பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்த உலக தலைவர்களுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஐதராபாத் இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் அலுவலகத்திலிருந்து ஐதராபாத் இல்லத்துக்கு காலை 9.20 மணிக்கு மோடி சென்றார். அவருடன் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் ஐதராபாத் இல்லத்துக்கு சென்றார். அங்கு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயுடன் மோடி முதலில் பேச்சு வார்த்தை நடத்தினார். இரு தரப்பு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
சில தினங்களுக்கு முன்பு ஆப்கனில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மீது 4 தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்தும் தலைவர்கள் பேசியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் அப்துல் கயூமிடம் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் மீனவர்கள் பிரச்னை குறித்தும் ஆலோசித்தார். இதன்பின், பகல் 12.30 மணியளவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் நரேந்திரமோடி பேச்சு வார்த்தை நடத்தினார். காஷ்மீர் பிரச்னை, இரு நாடுகளுக்கிடையிலான நதிநீர் பிரச்னை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இருதலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் புதுடெல்லி: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.உத்தரபிரதேசத்தில் உள்ள சுரப் ரயில் நிலையத்தின் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் நேற்று காலை மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்ட நரேந்திரமோடி, அந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க அவர் உத்தரவிட்டார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment