Tuesday, May 27, 2014
ஜம்மு:இந்திய விமான படையில் ரஷ்ய தயாரிப்பு மிக்&21 விமானங்கள் அதிக அளவில் உள்ளன. நீண்ட காலமாக இந்திய விமான படையில் இருக்கும் இந்த ரக விமானங்கள் அண்மை காலமாக அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. சரியான உதிரி பாகங்கள் கிடைக்காதது, போதிய பராமரிப்பு இல்லாதது ஆகியன விபத்துக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்நிலையில் இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக மிக்-21 விமானம் புறப்பட்டது. பைலட் ரகு பன்சி என்பவர் விமானத்தை ஓட்டினார். ஸ்ரீநகரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெஹரா என்ற இடத்தில் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் பன்சி அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் விமான படை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பைலட் மரணத்துக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment