Thursday, May 1, 2014

புலம்பெயர் தமிழர்களின் பணத்தை புலிகள் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது!

Thursday,May01,2014
இலங்கை::
புலிகள் தொடர்ச்சியாக பணம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தை தொடர்ச்சியாக புலிகள் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பிலான அண்மைய அறிக்கையில் அமெரிக்கா இதனை சுட்டிக்காட்டியுள்ளது.அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஊடாக  புலிகள் தொடர்ந்தும் நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு  புலிகள் இலங்கையில் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


புலிகள் நிதிக் கொடுக்கல் வாங்கல் வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புலிகள் மீள ஒருங்கிணையக் கூடும் என்ற அச்சம் காரணமாக தொடர்ந்தும் அரசாங்கம் வடக்கில் பாரியளவில் படையினரை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment