Thursday,May,01,2014
சென்னை::சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் குண்டு வெடித்தது.
இதில் ஒரு பெண் உயிரிழந்ததாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. சுமார் 12 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 9-வது நடைமேடைக்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்தக் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று (புதன்கிழமை) பாகிஸ்தாப் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய ஹெல்ப்லைன்: 044 - 2535 7398
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர
குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6
பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. பெண் ஒருவர் பலியானதாக உறுதி
செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம்
அறியப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு
சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த குண்டுவெடிப்பை
அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7. 30 மணியளவில் பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ்
ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த
சம்வபவம் நிகழ்ந்துள்ளது.
காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும்
மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 6பேர் இறந்துள்னர்.
ரயில் பெட்டிகள் எஸ். -4 எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.
ரயில்வே மேலாளர் பேட்டி:
இந்த சம்பவம் குறித்து ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில்,
ரயில் வந்ததும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 2 முறை குண்டு
வெடித்துள்ளது. பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 2 பேர் படுகாயமுற்றுள்ளனர். 7
பேர் லேசான காயமுற்றுள்ளனர். கண்காணிப்பு காமிரா மூலம் அடுத்தடுத்து
விசாரணைகள் தொடரும். பலியானவர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும்,
படுகாயமுற்றோருக்கு 25 ஆயிரமும், லேசான காயமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும்
வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி தொலைபேசிக்கு 04425357398 இந்த எண்ணில தொடர்பு கொள்ளலாம். முழு விசாரைணக்கு பின்னரே அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலம் முழுவதும் போலீஸ் உஷார்:
சென்னை குண்டு வெடிப்பை அடுத்து
கோவை- திருச்சி-நெல்லை, சேலம் , மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் உஷார்
படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்கள், ரயில்வே நிலையம், விமான
நிலையம் பகுதிகளில் போலீஸ் ரோந்து பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது:
இன்று நடந்த குண்டுவெடிப்பு
சம்பவம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு
மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயிலில் பதுங்கியிருந்தவர் யார் ?
குண்டு
வெடிப்பு நடந்த ரயில் பெட்டியின் கழிவறையில் ஒருவர் பதுங்கி இருந்தது
கண்டுபிடிக்கப்படது. இவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேரில் பார்த்தவர்கள் பேட்டி:
துப்பாக்கி சப்தம் போல் இரண்டு முறை
சப்தம கேட்டது. பின்னர் புகையாக வந்தது. ஒரு பெண் சம்பவ இடத்தில் இறந்து
கிடந்தார். போலீசார் உடனடியாக இங்கு இருந்தனர். பின்னர் நாங்கள் இங்கு
காயமுற்ற நபர்களை ஆஸ்பத்தரிக்கு கொண்டு போய் சேர்த்தோம். என இங்கு இருந்த
சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறினர்.
சென்ட்ரல் குண்டுவெடிப்பு : ஒருவர் கைது!
சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர். கைது செய்யட்ட நபரிடமிருந்து பெரிய பை ஒன்றை போலீஸ்
பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ரயில் பெட்டியின் கழிவறையில்
ஒளிந்து கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment