Thursday, May 1, 2014

சென்னை குண்டு வெடிப்பு வழக்கு : சிபிசிஐடி-க்கு மாற்றம்!

Thursday,May,01,2014
சென்னை::சென்னை சென் டிரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்ப வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக போலீஸ் டி.ஜி.பி ராமானுஜம் கூறியதாவது:

சாதாரண அளவில்தான் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மிகப் பெரிய குண்டு வெடிப்பு அல்ல. ரெயிலில் மிகப் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சென்னைக்கு இலக்கு இருப்பதாக கருதவில்லை. ஏனென்றால் ரெயில் ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்த பிறகே குண்டு வெடித்துள்ளது. இதனால் வேறு இடம் இலக்காக இருக்கலாம்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கை ரெயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு டி.ஜி.பி. ராமானுஜம் கூறியுள்ளார்.

குண்டு வெடிப்பில் காயம் அடைந்து அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை போலீஸ் டி.ஜி.பி. அனுப் ஜெய்ஷ்வால் நேரில் சென்று பார்த்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, இந்த குண்டு வெடிப்புக்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். விசாரணைக்கு பிறகே எதுவும் கூற முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment