Thursday, May 1, 2014

அமெரிக்க வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு பாராட்டு!

Thursday,May01,2014
இலங்கை::
அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள நாடுகள் தொடர்பான அறிக்கை,
 
 2013 ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் பற்றிய நாடுகள் சார்ந்த அறிக்கை (Country Report on Terrorism) அமெரிக்க வெளிவிவகார அமைச்சினால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கீழ் அவைக்கு (US Congress) நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. தனது கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் விடயத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு, தாயகப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி அமைச்சுக்களோடு இணைந்து இலங்கை மும்முரமாகச் செயற்பட்டது என பாராட்டுகின்ற அந்த அறிக்கை,
 
அமெரிக்காவின் கரையோரக் காவல் படை, இலங்கை கடற்படைக்கும், கரையோரக் காவல் படைக்கும் தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கின்றது. 'ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு' என்ற தலைப்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
 
இதேவேளை - இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல் நாள் - வெளியேறிச் செல்லும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் பிரியாவிடை நிழ்வில் - தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கலந்துகொண்டிருந்தார். அதற்கு முன்னதாக - கடந்த வாரம்தான் அமெரிக்காவில் இருக்கும் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் மூடிய கதவுகளுக்குப் பின்னாலான சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment