Thursday, May 29, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென
இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் மலேசியாவில் கைது
செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம், அகதி அந்தஸ்து
வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வாறு அகதி அந்தஸ்து வழங்குகின்றது என்பது தெளிவாகவில்லை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அகதிகளின் விண்ணப்பங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு முன்னதாக சில முக்கியமான விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி குறித்த மூன்று சந்தேக நபர்களையும் மலேசிய காவல்துறையினர் கைது செய்து, 25;ம் திகதி நாடு கடத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினை பயன்படுத்தி எவரும் குற்றச் செயல்கள் மோசடிகளில் ஈடுபட அனுமதியளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றால் அது குறித்த சாட்சியங்களை மனித உரிமை கண்காணி;ப்பகம் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமர்பி;க்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்குள் பிரவேசித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. யுத்த நிறைவின் பின்னர் பிரி;த்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து போலியாக புகலிடம் கோரிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment