Thursday, May 29, 2014

இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்ற சம்பூர் அனல் மின்நிலையத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உத்தரவு!

Thursday, May 29, 2014
இலங்கை::இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்ற சம்பூர் அனல் மின்நிலையத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டிணைவின் அடிப்படையில் சுமார் 512 மில்லியன் டொலர்களுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் கீழ் 250 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சக்தி வளத்துறை அமைச்சுக்கு ஜனாதிபதி இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment