Thursday, May 29, 2014

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம்!

Thursday, May 29, 2014
இலங்கை::கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தை உரிமை கோரியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.
 
கொள்ளுப்பிட்டியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,
 
கிளிநொச்சியில் கைப்பற்றியுள்ள பிரதேசத்தில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சில தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சாவகச்சேரியில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்படட 42 பேர் கலந்துகொண்டனர்.
 
இக்காணிகளுக்கு உரிமை கோரும் எவரிடமும் சட்ட ரீதியான காணி உறுதிகள் இல்லை, மேலும் ஒரு காணிக்காக பலர் உரிமை கோரும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சட்ட ரீதியான காணி உறுதிகளைச் சமர்ப்பித்தவர்களுக்கு கிளிநொச்சியில் 108 ஏக்கர் காணிகளை நாம் மீளக் கையளித்துள்ளோம் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment