Friday, May 2, 2014

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையீடு செய்ய வேண்டும்: முஸ்லிம் பாராளுமன்ற உறப்பினர்கள்!

Friday, May 02, 2014
இலங்கை::முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையீடு செய்ய வேண்டுமென முஸ்லிம் பாராளுமன்ற உறப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுபலசேனா, ராவனா பலய மற்றும் சிஹல ராவய போன்ற சிங்கள கடும்போக்குவாத அமைப்புக்களினால் பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை முறியடிக்க ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடி நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். முஸ்லிம் இடம்பெயர் மக்கள் தொடர்பி;ல் குரோதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்படத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த கடும்போக்குடைய அமைப்புக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள், ஹலால் உணவு வகைகள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆடைகள் தொடர்பில்ழ குரோதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற எந்தவொரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment