Friday, May 2, 2014

பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று பேர் காயம்!

Friday, May 02, 2014
இலங்கை::பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ரோர்ச் லைட் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
 
வீதியில் கிடந்த ரோர்ச் லைட் ஒன்றை வீட்டிலிருந்த குழந்தை எடுத்துச் சென்றதாகவும், அந்த ரோர்ச் லைட்டை குழந்தையின் தந்தை இயக்க முற்பட்ட போது வெடித்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதிகளிலோ அல்லது வேறும் இடங்களிலோ இலத்திரனியல் சாதனங்கள் காணப்பட்டால் அதனை எடுக்க வேண்டாம் என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment