Friday, May 2, 2014

ஆவடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : காவல்துறை கடும் எச்சரிக்கை!

Friday, May 02, 2014
சென்னை::சென்னை சென் டிரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பின் பரபரப்பு அடங்குவதற்குள், சென்னையின் மற்றொரு ரயில் நிலைத்திற்கு குண்டு வெடிப்பு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு சென்னை போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய வாலிபர் ஆவடி ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிக் கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.

இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஆவடி ரயில் நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள பட்டாபிராம், அம்பத்தூர் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

மேலும் ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த 1.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே குண்டு வெடிப்பு காரணமாக எழும்பூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment