Friday, May 2, 2014

வெளிநாடுகளுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை: ருவான் வணிகசூரிய!

Friday, May 02, 2014
இலங்கை::வெளிநாடுகளுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
வெளிநாடுகளில் இயங்கி வரும்  புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் வெளிநாடுகளுக்கு புலனாய்வுப் பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. 18 நாடுகளுக்கு பதினெட்டு புலனாய்வு அதிகாரிகளை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், பாதுகாப்பு செயலாளர் அவ்வாறு ஊடகங்களில் கருத்து வெளியிடவில்லை எனவும், புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment