Wednesday, May 28, 2014

புலிக்களுக்கு எதிரான போர் வெற்றியை துரோகச் செயலாக சில மேற்குலக நாடுகள் கருதுகின்றன: இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க!

Wednesday, May 28, 2014
இலங்கை::புலிக்களுக்கு  எதிரான போர் வெற்றியை துரோகச் செயலாக சில மேற்குலக நாடுகள் கருதுவதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
சிவிலியன்களை புலிபயங்கரவாதத்திலிருந்து மீட்டமையை சில மேற்குலக நாடுகள் துரோகச் செயலாக நோக்குகின்றன.
 
இராணுவத்தின் பணிகள் குறித்து உரிய பிரச்சாரம் அளிக்கப்படவில்லை. உரிய முறையில் இராணுவத்தின் பணிகள் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தால் மேற்குலக நாடுகளின் போலிக் குற்றச்சாட்டுக்களை தவிர்த்திருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
 
இராணுவத்தினருக்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையொன்றின் நிறைவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment