Wednesday, May 28, 2014

மட்டக்களப்பு படுவான்கரை மாணவர்களின் நன்மை கருதி முதலாவது விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பித்துவைப்பு!

Wednesday, May 28, 2014
இலங்கை::மட்டக்களப்பு படுவான்கரை மாணவர்களின் நன்மை கருதி முதலாவது விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப பிரிவு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நேற்று  ஆரம்பித்துவைக்கப்பட்டது.
விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப பிரிவு கொண்ட பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் படுவான்கரை பகுதி மாணவர்களின் நன்மை கருதி பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியின் காரணமாக இந்த விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப பிரிவு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்துக்கு கிடைத்துள்ளது.

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் அதிபர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதிக்கல்விச்சேவைகள் அமைச்சர் மொஹான்லால்  கிரேரு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டதன் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

அத்துடன் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment