Friday, May 02, 2014
இலங்கை::சென்னையில் கைது செய்யப்பட்ட நபருக்கும் தமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று தெரிவித்துள்ளது
இலங்கை::சென்னையில் கைது செய்யப்பட்ட நபருக்கும் தமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று தெரிவித்துள்ளது
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம்.
பாகிஸ்தானுக்காக உளவுப் பணிகளில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
கண்டியைச் சேர்ந்த 37 வயதுடைய சகீர் ஹுஸைன் என்பவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டிருந்தார்.
தென்னிந்தியாவில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக
இளைஞர்களை ஆள்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையில், இவரை கொழும்பிலுள்ள
பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஈடுபடுத்தியிருந்தார் என்றும்
அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், குறித்த தகவல்களை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரம்
மறுத்துள்ளது. இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களில் உள்ளது போன்று எவரும்
சென்னைக்கு அனுப்பப்படவில்லை. அவ்வாறானதொரு நடவடிக்கையில் பாகிஸ்தான்
தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவில்லை” என்று இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது .

No comments:
Post a Comment