Friday, May 02, 2014
இலங்கை::யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என நூற்றி அறுபத்தாறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலரத்தினா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ் மாவட்ட பொலிஸ் உயர்
அதிகாரிகளுக்கும் இடையே வாராந்தம் நடைபெறும் ஊடகவியலாளர்
மாநாடு இன்று பகல் 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது.அதில் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட ஒன்பது பொலிஸ்
நிலையங்களிலும் கடந்த ஒருவார காலத்தில் அங்கு சேட்டை செய்த ஒருவரும்,
பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஒருவரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 07
பேரும், அடித்துக்காயப்படுத்திய 28 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி மது
விற்பனையில் ஈடுபட்ட 12 பேரும், சந்தேகத்தின் பெயரில் 15 பேரும், பிடியானை
பிற்ப்பிக்கப்பட்ட 12 பேரும், வீதி விபத்துக்கள் சம்பந்தமாக 03 பேரும்,
அடித்துடைத்து நட்டம் ஏற்படுத்தியது சம்பந்தமாக ஒருவரும், குடித்துவிட்டு
கலகம் விளைவித்தது சம்பந்தமாக 04 பேரும், களவு சம்பந்தமாக 03 பேருமாக
மொத்தம் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள எட்டு பொலிஸ்
நிலையங்களினாலும் பாரியகுற்றங்கள் சம்பந்தமாக 06 பேரும் பிடியானை
பிறப்பிக்கப்பட்ட 18 பேரும் சந்தேகத்தின் பெயரில் 13 பேரும் குடிபோதையில்
வாகனம் செலுத்திய 02 பேரும் ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 40 பேரும் கைது
செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment