Friday, May 2, 2014

படை வீரர்களை நினைவுகூறும் மாதத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது!


flag-2
flag-3
HE RANAWIRU MON 1
HE RANAWIRU MON 2
HE RANAWIRU MON 3
Friday, May 02, 2014
இலங்கை::படை வீரர்களை நினைவுகூறும் மாதத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(02) அலரி மாளிகையில் நடைபெற்றது. இது தொடர்பிலான கொடி விற்பனை இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 
முதலாவது கொடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது. இந்த நினைவு மாதம் எதிர்வரும் ஜுன் 02 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். கடந்த வருடம் அனுஷ்டிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் நினைவு மாதத்தின் போது கொடி விற்பனையில் பெறப்பட்ட இலாப விபரங்கள் மாகாண ஆளுனர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிதி படைவீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு விற்கப்படவேண்டிய கொடிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண ஆளுனர்களிடம் கையளித்தார். பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதியினால் இன்று புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment